கல் வீசம்மா கல் வீசு
++++++++++++++++++
Mohamed Nizous
கல் வீசு மூதேவி கல் வீசு
கடையை உடைக்கலாம் கல் வீசு
லொட்டாய் அள்ளலாம் கல் வீசு
பொதுவாய்ப் பிரிக்கலாம் கல் வீசு
அப்பம் ஆட்சியில் கல் வீசு
அசமந்த ஆட்சியில் கல் வீசு
பூந்து அடிக்கலாம் கல் வீசு
பொருளை அள்ளலாம் கல் வீசு
தலங்கள் உடைக்கலாம் கல் வீசு
கலகம் செய்யலாம் கல் வீசு
சோக்காய் அள்ளலாம் கல் வீசு
சொகுசாய்ப் போடலாம் கல் வீசு
உழைக்கத் தெரியாது கல் வீசு
உள்ள பொறாமையால் கல் வீசு
தேரை தலைமையில் கல் வீசு
ஊரை அழிக்கலாம் கல் வீசு
பிள்ளை பெறாது கல் வீசு
பெறுபவனை அழிக்கக் கல் வீசு
காடையன் காவாலி கல் வீசு
மூடன் மூதேவி கல் வீசு
நாடு அழியக் கல் வீசு
நாயிலும் கீழாய் கல் வீசு
ஓட ஓட உன்னை விரட்டி
ஒரு நாள் அடிப்பார் அப்போது
மாடு போல் முட்டி திரிந்ததெல்லாம்
மடத்தனம் என்று புரிந்து கொள்வாய்