ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில்



ஏறாவூர் நிருபர்)ஏஎம் றிகாஸ்-
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினைக்கண்டித்தும் சட்டத்தை பாரபட்சமின்றி அமுல்படுத்தக்கோரியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று 07.03.2018 புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற நடவடிக்கை நேரத்தில் இந்த சட்டத்தரணிகள் நீதிமன்றக் கட்டடத்தின் முன்பாக அமைதியாக நின்று தமது கண்டனத்தை வெளியிட்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. சட்டத்தை பாரபட்சமின்றி அமுல் படுத்தும்போதுதான் இவ்வாறான அசம்பாவித சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியுமென தாம் கருதுவதாக சிரேஷ்ட சட்டத்தரணியொருவர் இங்கு கருத்துவெளியிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -