வெள்ளிக்கிழமை முஸ்லிம் கிராமங்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்குங்கள்- பிரதமரிடம் இம்ரான் எம்.பி அவசர வேண்டுகோள்


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு வெள்ளிக்கிழமை முஸ்லிம் கிராமங்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்குமாறு ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். வியாழக்கிழமை பிரதமரை அலரிமாளிகையில் சந்த்தித்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாராண நிலை தொடர்பாகவும் இதனால் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும் பள்ளிவாயல்களுக்கும் ஏற்பட்டுள்ள அபாய நிலை தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடும் போதே இந்த கோரிக்கையை விடுத்தார்.அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

 வெள்ளிக்கிழமை என்பதால் பெருமளவான முஸ்லிம்கள் ஜும்மா தொழுகைக்காக பள்ளிவாயலில் கூடுவர். அதேவளை வீடுகளில் பெண்கள் தனிமையிலேயே இருப்பர். எனவே இந்த நேரத்தை பயன்படுத்தி இனவாதிகள் மக்கள் அதிகமாக கூடும் பள்ளிவாயலையோ ஆண்கள் இல்லாத தெருக்கலையோ இலக்குவைத்து’ தாக்குதல் நடத்த கூடும். எனவே முஸ்லிம் கிராமங்களின் முக்கியமாக எல்லைப்புறங்களில் உள்ள முஸ்லிம் கிராமங்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்குங்கள் என தெரிவித்தார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -