இது தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. எவ்வாறெனினும் சில சந்தர்ப்பங்களில் இனவாத தரப்பினர் பல குழப்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் கிடைத்தால் அவை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படை பிரதானி அலுவலகத்தில் இந்த நிலையம் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக செயற்படும். எனவே இவ்வாறு தகவல்கள் கிடைத்தால் 0711261251 என்ற இலக்கம் அல்லது helpdesk@dgi.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப் படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.