கண்டி திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூர தாக்குதல்கள் மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் வேண்டப்படாத சம்பவங்களின் எதிரொலியாக இன்று அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் இடம்பெற்றுவரும் இன்றயசூழலில் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவரும் முஸ்லிம்களுக்கு எதிராக பாதுகாப்புத் தரப்பினர் இறுக்கமான எதிர் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுதலை செய்வதற்கான முயச்சிகளை செய்துவருவதாகவும் அதன் ஒரு கட்டமாக கல்முனை அக்கரைப்பற்று பிரதேசத்துக்குப் பொறுப்பான விசேட அதிரடிப்படையின் பொறுப்பாளர் கேசரவுடன் பேசியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் திகனையில் இருந்து எமக்கு கருத்துத் தெரிவித்தார்.
திகன பிரதேசத்தில் முகாமிட்டுள்ள பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் பாராளமன்ற உறுப்பினர்கள், அங்கு சுமூக நிலையை எற்படுத்துவதற்காக பல்வேறு முயச்சிகளை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.