வைத்தியப்பரிசோதனையும் ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு”

பைஷல் இஸ்மாயில் -
சுதேச மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு” அட்டாளைச்சேனை தளஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எம்.அஸ்லம் தலைமையில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேதவைத்தியசாலையில் நேற்று(13.03.2018) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

“போசாக்கு மற்றும் தொற்றா நோய்” என்ற தொனிப் பொருளில் முதியவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை நேற்று காலை 9.00 மணிதொடர்க்கம் 11.00 மணிவரை இக்கருத்தரங்கு சிறந்த முறையில் நடைபெற்றது. இதில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள சுமார் 50 மேற்பட்ட ஆண், பெண் உள்ளிட்ட இருபாலாரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.இதன் போது ஆயுள்வேத முறையில் தயாரிக்கப்பட்ட கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களான ஐ.எல்.அப்துல் ஹை, பர்வீன் முகைடீன், எஸ்.எம்.றிசாத்,எல்.பஸ்மினா, எம்.எஸ்.சிஹானா, ஏ.ஆர்.எப்.ஆசிக்கா, எம்.ரீ.அமிறா உள்ளிட்ட வைத்தியர்களின் பங்கு பற்றுதலுடன் விஷேட வைத்திய சேவையும்இதில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -