அரசியல் கைதி சுதாகரனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்க!


அரசாங்கத்திடம் பிரபல சமூக செயற்பாட்டாளர் றுஸ்வின் கோரிக்கை
சிறுபான்மை இன மக்களின் வாக்குகளினால் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள இந்த நல்லாட்சி அரசு சிறுபான்மையினருக்கு நல்லது செய்வதாக இருந்தால் ஆயுட்கால சிறைக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என பிரபல சமூக செயற்பாட்டாளரும், பாடுமீன் லயன்ஸ் கழக உறுப்பினருமான மொஹமட் றுஸ்வின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு காணிப் பிரச்சினை, காணாமல்போனவர்களது பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை என பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு இந்த அரசாங்கம் சரியான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
கடந்த வாரம் கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் தண்டனைக் கைதி சுதாகரனின் பத்து வயது மகள், தனது தாய் இறந்த நிலையில் அனாதையாக இருக்கும் தமக்கு கருணை காட்டி தமது தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி மற்றும் அவரது மகள் சத்துரிகா சிறிசேன ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்ததும், தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறி தானும் தந்தையோடு செல்ல முற்பட்டமையும் அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த சிறுமியின் கோரிக்கை நியாயமானது. தாயின்றி தவிக்கும் அந்த சிறுமிக்கு தனது தந்தையின் விடுதலை சற்று ஆறுதலாக அமையும். எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தி சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சுதாகரனை விடுதலை செய்யுமாறு கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் கையெழுத்து வேட்டையொன்றையும் முன்னெடுத்திருந்தனர். இவ்வாறான செயற்பாடுகள் இரு சமூகங்களுக்கிடையிலான உறவினை அதிகரிக்கச் செய்யும். கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான உணர்வுகளை மறந்து தமிழ்,முஸ்லிம் மக்கள் தமது உரிமைக்காக ஒன்றினைந்து பயணிக்க வேண்டிய காலகட்டத்தில் இரு சமூகமும் இருக்கின்றது. 

சிறுபான்மையினரின் ஆதரவோடு ஆட்சியில் அமர்த்த்ப்பட்டுள்ள இந்த நல்லாட்சி அரசு சிறுபான்மையினரின் உரிமை விடயத்திலும், பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்திலும் மந்த கதியில் செயலாற்றுகின்றமை கவலைக்குரியது என அவர் மேலும் சுட்டிக்காட்னார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -