முஸ்லீம் காங்கிரசின் கோட்டையில்- றிஷாத் அணி ஆட்சி அமைத்தது..

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் கோட்டையான அம்பாரை மாவட்டத்தில் அதிகாரமே இல்லாத அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்மாட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று சம்மாந்துறைப் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்துக் கொண்டது.

அது போன்று இன்னும் உள்ள சபைகளிலும் தாங்களே ஆட்சி அமைப்போம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட வட்டாரத் தகவல்கள தெரிவிக்கின்றன.


எது எவ்வாறாயினும் அம்பாரை மாவட்டத்தில் இரண்டு பிரதி அமைச்சர்கள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்பீட உறுப்பினர்கள் அத்துடன் கட்சியின் செயலாளர் தவிசாளர் அடங்கலாக ஒருமித்து இருக்கும் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது.

அத்துடன் போனால் போகட்டும் போடா.... என்னும் பாடலைப் போன்றல்லாது ஏன் போகிறார் என்னும் காரணம் அறியவதற்கு, என்று கட்சி முற்படுகிறதோ அன்றுதான் கட்சிக்கு வெற்றியுண்டு.
 அதுவரை இருப்பதும் இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -