மேயர்/ தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டால் சுமார் 3 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது
=================================
வை எல் எஸ் ஹமீட்-நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து மேயரை/ தவிசாளரை நீக்குவதற்கு தற்போதைய உள்ளூராட்சி சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை.
இரண்டு வருடங்களுக்கு வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் மேயரை/ தவிசாளரை பதவிநீக்க முடியாது.
வரவு-செலவுத்திட்டம் முதல்முறை தோற்கடிக்கப்பட்டால் மேயர்/ தவிசாளர் மீண்டும் அதனை சமர்ப்பிக்கலாம். அதுவும் தோற்கடிக்கப்பட்டால் வரவு-செலவுத் திட்டம் தாமாக நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.
இரண்டு வருடங்களின்பின் கொண்டுவரப்படுகின்ற வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையும் தோற்கடிக்கப்பட்டால் மேயர்/ தவிசாளர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படுவார். அதாவது பதவியிழப்பார்.
அதாவது, இரண்டு வருடங்களுக்கு பதவிக்கு முழு உத்தரவாதம் உண்டு. அடுத்த வரவு-செலவுத் திட்டத்திற்கு சில மாதங்களோ ஒரு வருடமோ செல்லலாம். ஆகவே, மொத்தமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பெரும்பான்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லாமல் ஆட்சி செய்யலாம்.