கண்டி,திகண,மடவள ஆகிய பிரதேசங்களில் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்,மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு,கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும்,அரசு முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் செய்வாய்கிழமை(06-03-2018)இடம்பெற்ற பூரண ஹர்த்தால்,கடையடைப்பு,ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவித்து கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மருதமுனை.கல்முனை.நற்பிட்டிமுனை.சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் 36 பேர் விசாரணைகனின் பின்னர் நேற்று(07-03-2018)நல்லிரவு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்;.
மருதமுனையைச் சேர்ந்த 17 பேரை விடுவிப்பதில் மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்;.றக்கீப் தலைமையில் மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஏ.எம்.பதுறுததீன்,அமீறுள் அன்ஸார் மௌலானா,ஆகியோருடன் இளம் சட்டத்தரணிகளான ஏ.ஜி.பிரேம் நவாத்,ஏ.எல்.றிபாஸ்,நூறுல் அமீன் அஸாம்,அநோஜ் பிர்தௌஸ் ஆகியோர் அதிக பிரயத்தனங்களை மேற்கொண்டு விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சாய்ந்தமருது,கல்முனை,நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பேரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையிலான சட்டத்தரணிகளால் விடுவிக்கப்பட்டார்கள்.