முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயல்களை கண்டித்து நேற்று (06.03.2018) மருதமுனையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதுடன் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கல்முனை பொலிஸாரால் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் எட்டு (08) மோட்டர் சைக்கில்கள் ஏழு (07) துவிச்சக்கர வண்டிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பெரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸாா் தெரிவித்தனர்.
இதேவேளை கைது செய்தவர்கள் அப்பாவி பொதுமக்கள் பள்ளிவாசல்கள், பாடசாலைகள், சந்தைக்கு சென்று வந்தவர்கள் எனவே இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மருதமுனை கிராமத்திலுள்ள சட்டத்தரணிகள் மற்றும் பள்ளிவாசல்கள் சமூகத்தனர் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவா்கள் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸாா் சரமாரியாக தாக்கியதாகவும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.