ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் புதையல் தோண்ட முற்பட்ட 10 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது



நேற்று  இரவு 11.50 மனியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்

முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து உயரதிகாரிகளின் ஆலோசனைக்கமைய முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப்படை பிரதானி ஆனந்த பிரேமசிறி அவர்களின் வழிகாட்டலில் என் எஸ் புஸ்பகுமார தலைமையிலான W.M.P வீரகோன், R.A.D.A ரணசிங்க, R.A.P.T ரணதுங்க பொலிஸ் கொத்தாபல்களான (11498) திலகரத்ன, (11259) ஜெயசுந்தர, (87092) திலகரத்ன, (70567) தசங்க, (79605) அசேல, (85436) லக்மால் மற்றும் (16731) சந்துருவன் ஆகியோர் கொண்ட அணி மேற்கொண்ட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெடிமருந்துகள் மின்பிறப்பாக்கி மற்றும் பல உபகரணங்களையும் கைப்பற்றியதோடு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்

இவர்கள் கண்டி, நுவரெலிய, முல்லைத்தீவு, விஸ்வமடு, நிட்டம்புவ, வத்தேகம உள்ளிட்ட பகுதிகளை சேந்தவர்கள் எனவும் முன்னாள் போராளிகளும் இதில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -