நல்லாட்சி அரசாங்கம் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளது வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்காவிட்டால் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கப் போவதாக சூழுரைக்கின்றார் அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம்கள் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் அப்துல் ஹமீட் மொகமட் நசுறுதீன்.
கிழக்கு மாகாணசபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படவுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான ஒரு தொகை வேலைவாய்ப்பில் பலர் நிராகரிக்கப்படுகின்றனர் என்பது தொடர்பாக இன்று 25 ஆம் திகதி காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.............
தற்பொழுது கிழக்கு மாகாணசபை பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி அம்பாறை மாவட்டம் வேலையற்ற பட்டதாரிகளாகிய நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். இது தொடர்பாக ஆளுணர் மற்றும் கிழக்கு மாகாணசபை பொதுச் சேவைகள் இரண்டும் எமது மாவட்டத்திங்கு அநீதி இழைத்துள்ளது தொடர்பாக நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அந்தவகையில் அண்மைக்காலமாக எமது போராட்ட காலங்களில் கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்படடுகின்ற ஆளுணர்கள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவராக அமைய வேண்டும் அத்துடன் பிரதேசத்தில் செறிந்து வாழ்கின்ற தமிழ் சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்ட வேண்டும் காரணம் கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் சுனாமியினாலும் பல அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளதனை கருத்தில் கொண்டு தமது கடமையினை செயற்படுத்தியிருப்பார் ஆகவே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பேச்சக்கூடிய ஒரு புத்திஜீவியை நியமிக்கப்பட்ட வேண்டும்.
நாங்கள் எங்களது போராட்டத்தில் குறிப்பிட்டிருந்தோம் எங்களுக்கான தீர்வு எட்டப்படாவிட்டால் உள்ளுராட்சி மன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அதன்படி இந்த நல்லாட்டி அரசாங்கத்தை ஒட்டு மொத்த பட்டதாரிகள் சமூகம் ஒன்றிணைந்து நாடு பூராகவும் தோற்கடிக்கச் சொய்துள்ளோம். அவ்வாராகவே மீண்டும் எக்கான தீர்வுகள் சரியான முறையில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் தனித்து சுயேட்சையாக களமிறங்கவுள்ளோம் என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன் என அவர் கருத்து தெரிவித்திருந்தார்.