அவன்கள் வழியில் இவன்
+++++++++++++++++++++++
Mohamed Nizous
பிர் அவ்ன் பிள்ளைகளை
பிறக்கு முன் கொன்றொழித்தான்.
கர்வம் பிடித்த இவன்
கதறிக் கதறி அழ
இருக்கும் பிள்ளைகளை
இரக்கமின்றிக் கொல்கிறான்.
நும்றூத் நெருப்பெரித்தான்
நொந்து போகக் கொல்வதற்காய்-இந்த
வம்பனும் எரிக்கின்றான்
வானத்தால் குண்டு போட்டு
அபூஜஹில் கந்தக்கில்
அந்நியருடன் படையெடுத்தான்.-இந்த
ஆஷாத்தும் அழிப்பதற்காய்
அடுத்தவனை அழைக்கின்றான்.
சரித்திரம் சொல்கிறது
சதிகார வெறியர்கள்
இறுதியில் என்ன ஆனார்
எப்படி இழிந்து போனார்
அவன்கள் வழியிலேயே
இவனும் அழிந்து போவான்
எவனும் அநீதி செய்தால்
இறுதியில் இழிவே மிஞ்சும்