தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - பிராந்திய ஆதரவு மையம், கிழக்கு - திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

ஹஸ்பர் ஏ ஹலீம்-


RSC (NC) & RSC (East) Champions Trophy - 2018 
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், கிழக்கு), திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அணி மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், வட மாத்தி), அனுராதபுரம் பிராந்திய முகாமையாளர் அணிகளுக்கிடையில் இன்று 25.02.2018 ம் திகதி ஜாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில் 10 ஓவர் கொண்ட மூன்றுக்கு இரண்டு என்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர் திருகோணமலை கோட்டை மைதானத்தில் நடை பெற்றது.

நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், வட மத்தி), அனுராதபுரம் பிராந்திய முகாமையாளர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்ததற்கமைய 10 ஓவர் முடிவில் 06 விக்கெட் இழப்பிட்கு 111 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், கிழக்கு), திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அணி 10 ஓவர் முடிவில் 07 விக்கெட் இழப்பிட்கு 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவினார்.

இரண்டாம் கட்ட தொடரில்
நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், வட மாத்தி), அனுராதபுரம் பிராந்திய முகாமையாளர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்ததற்கமைய 10 ஓவர் முடிவில் 05 விக்கெட் இழப்பிட்கு 112 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், கிழக்கு), திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அணி 8.4 ஓவர் முடிவில் 04 விக்கெட் இழப்பிட்கு 115 ஓட்டங்களை பெற்று 06 ஆறு விக்கெட்களால் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், கிழக்கு), திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அணி வெற்றி பெற்றது.

இறுதிச் சுற்றில்
நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், வட மாத்தி), அனுராதபுரம் பிராந்திய முகாமையாளர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்ததற்கமைய, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், கிழக்கு), திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அணி 10 ஓவர் முடிவில் 03 விக்கெட் இழப்பிட்கு 133 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், வட மாத்தி), அனுராதபுரம் பிராந்திய முகாமையாளர் அணி 10 ஓவர் முடிவில் 07 விக்கெட் இழப்பிட்கு 84 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியதோடு, வெற்றி பெற்றது. 49 ஓட்டங்களினால் வெற்றி பெற்றனர்.

எனவே மூன்றுக்கு இரண்டு என்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரின் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், கிழக்கு), திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர். மேலும் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை - (பிராந்திய ஆதரவு மையம், கிழக்கு), திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அணியின் இப்திகார் என்பவர் பெற்றுக்கொண்டார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -