அம்பாறை கரையோர பிரதேசங்களிலுள்ள சிறுவர் இல்லங்களின் முகாமையாளர்கள், சிறுவர் தொடர்பாக செயற்படும் அரச உத்தியோகஸ்தர்கள், சிவில் அமைப்புகளுக்கிடையிலான இணைப்பு குழு கூட்டமொன்று நேற்று கல்முனையில் நடைபெற்றது.
மனித அபிவிருத்தி தாபனம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை காரியாலயத்தில் அதன் இணைப்பாளர் இஸ்ஸடீன் லத்திப் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலகங்களில் கடைமையாற்றும் உத்தியோகஸ்தர்கள், மனித அபிவிருத்தி தாபன உத்தியோகஸ்தர்கள், சிறுவர் இல்லங்களின் முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொணடார்கள்.
இதில் சிறுவர் இல்லங்களில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள்,தேவைகள், பிள்ளைகளின் கற்றல் கற்பித்தலுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு, பொழுது போக்கு வசதிகள், விளையாட்டு, சுகாதார வசதிகள் மற்றும் தொழில் பயிற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதனை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் திட்டமிடப்பட்டன.