ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தலவாக்கலையில் கூட்டப்பட்ட கூட்டம் அவருக்கு வாக்களித்த கூட்டம் அல்ல



 இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு


க.கிஷாந்தன்-
னாதிபதி கடந்த காலங்களில் யாழ்ப்பாணம், மட்டகளப்பு போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பேசுகையில், நீங்கள் எல்லாம் எனக்கு வாக்களித்த மக்கள் ஆதலால் உங்கள் அணைவருக்கும் நன்றி என்று தெரிவிக்கின்றார். ஆனால் கடந்த 28ம் திகதி தலவாக்கலையில் இடம்பெற்ற கூட்டத்தில் நீங்கள் எனக்கு வாக்களித்த மக்கள் என்று ஜனாதிபதிக்கு கூற முடியவில்லை. காரணம் தலவாக்கலையில் கூட்டப்பட்ட கூட்டம் அவருக்கு வாக்களித்த கூட்டம் அல்ல. அவருக்கு எதிராக வாக்களித்த கூட்டம். அதனால் தான் அவருக்கு அதை கூற முடியவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு எதிர்வரும் வாரங்களில் எவ்வாறு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெளிவுபடுத்தும் கூட்டம் (02.02.2018) அன்று தலவாக்கலை விருந்தகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு பேசிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை கொண்டு வந்து வாக்கு சேகரிக்கும் நிலைமைக்கு இன்று மலையகத்தில் ஒரு சில தொழிற்சங்கங்கள் தள்ளப்பட்டிருக்கின்றமைக்கு காரணம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சியும் அதனுடைய செயற்பாடுகளுமே காரணம்.

இந்த தேர்தலை பொறுத்த அளவில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும். எனவே இதில் புதிய சபைகளில் ஆட்சியை கைப்பற்ற வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது .எமது எதிர் தரப்பினர் தேர்தலில் தோல்வியை தவிர்த்துக் கொள்வதற்காக மக்களால் நிராகரிக்கப்பட்டு இன்று ஜனாதிபதியின் அனுசரணையுடன் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டு அமைச்சர்களாக இருக்கின்றவர்களை அழைத்து வந்து தங்களுடைய வாக்குகளை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் ஒரு விடயத்தை மறந்து விட்டார்கள். அந்த உறுப்பினர்கள் தங்களுடைய வெற்றியை உறுதி செய்து கொள்ள முடியாமல் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அவர்கள் கூறி எங்களுடைய மக்கள் வாக்களிப்பதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பதை அவHகள் தெரிந்து கொள்ள வேண்டும். மிகவும் அநாகரிகமற்ற விதத்தில் அவர்கள் பேசுகின்றார்கள்.இதன் காரணமாகவே அவர்களை மக்கள் ஒரம்கட்டினார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

எனவே என்னை பொறுத்த அளவில் நான் யாரையும் தரம் குறைவாக பேசமாட்டேன். அவர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக நாங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை.நாங்கள் நாகரீகமான ஒரு அரசியலை முன் கொண்டு செல்லுவோம்.மற்றவர்களை தரம் குறைவாக பேசித்தான் நாங்கள் வாக்கு கேட்க வேண்டும் என்ற நிலை தற்பொழுது இல்லை.எனவே நாங்கள் கௌரவமான ஒரு அரசியலை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

இன்று அரசியல் ரீதியாக மலையக மக்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றார்கள்.அந்த வளHச்சிக்கு முக்கிய காரணம் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பதை யாரும் மறந்துவிட முடியாது.இந்த வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களே எங்கள் மீது பெரும்பான்மை அரசியல்வாதிகளை அழைத்து வந்து சேறுபூசுகின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள்.இந்த தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு ஒரு தகுந்த பாடத்தை புகட்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 




  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -