இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது.
அந்த வகையில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின் அடிப்படையில், பொருட்களின் விலை குறைப்பானது எதிர்வரும் 7ஆம் திகதி வரை நடைமுறையில் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
பாஸ்மதி ஒரு கிலோகிராம் - 120 ரூபா
வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோ கிராம் - 60 ரூபா
உடைக்கப்பட்ட அரிசி ஒரு கிலோகிராம் - 59 ரூபா
பருப்பு ஒரு கிலோகிராம் - 159 ரூபா
பயறு ஒரு கிலோகிராம் - 195 ரூபா
பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் - 110 ரூபா
காய்ந்த மிளகாய் ஒரு கிலோ கிராம் - 220 ரூபா
இந்த பொருட்களை குறைப்பட்ட விலையின் அடிப்படையில் மொத்த கூட்டுறவு விற்பனை நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
