எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள நாவிதன்வெளி கோட்டத்தின் சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலய மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அல்-குர்ஆன் மனனம் போட்டியில் திறமை காட்டிய மாணவர்களுக்கான கிறாஅத் வார பரிசளிப்பு விழா நேற்று பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மனித நேய நற்பணி பேரவையின் தலைவரும், பிரதம நிறைவேற்று பணிப்பாளருமான மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர் கலந்து கொண்டார்.
பாடசாலையின் கலை, கலாச்சார குழுவின் ஏற்பாட்டில் சம்மாந்துறை இர்ஷாட் ஏ.காதர் நற்பணி மன்றத்தின் அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் ஏ.எச்.எம்.சவாஹிர், மத்திய முகாம் சவளக்கடை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.சி.தஸ்தீக் (மதனி) சம்மாந்துறை இர்ஷாட் ஏ.காதர் நற்பணி மன்றத்தின் பணிப்பாளர்களான எஸ்.எம்.அமீர், எம்.எஸ்.நைஸர், கலை, கலாச்சாரக் குழுவின் தலைவர் ஆசிரியர் மௌலவி ஐ.எல்.அப்துல் மனாப் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திலுள்ள 400 மாணவர்கள் கிறாத் போட்டியில் கலந்து கொண்டதுடன் 100 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் முதலாம் இடத்தினை ஏ.ஜே.எம்.ஹம்தியும், இரண்டாம் இடத்தினை ஏ.அனூப் ரீமாவும், மூன்றாம் இடத்தினை ஏ.எப்.நிஹாவும், நான்காம் இடத்தினை எம்.ஆர்.றக்சானாவும் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது திறமை காட்டிய மற்றும் வெற்றி மாணவர்களுக்கு சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் கேடயம் ஆகியவை கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.