ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நடாத்த கிழக்கில் தடை!.

காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பிரத்தியேக வகுப்புகளை பகல் 1மணிவரை நடாத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விகலாசார அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்காவினால் மாகாணகல்விப்பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்ட்டிருக்கிறது.

ஆளுநரின் பணிப்புரைக்கமைவாக ஞாயிறு தினங்களில் சமுக ஆன்மீகவளர்ச்சிக்கு நடாத்தப்படும் சமயவகுப்புகள் மாணவர்க்கு நன்மை பயக்கக்கூடியது எனவே அன்று பகல் 1மணிவரை தனியார் வகுப்புகளை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

வலயத்திலுள்ள அதிபர்கள் தத்தமதுபாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களுக்கு அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -