ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜெனிவாவிற்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக கடந்த மூன்றாண்டுகாலத்திற்கும் மேலாக பதவியாற்றி தற்போது சேவை நீடிப்பில் உள்ள ரவி நாத் ஆரியசிங்கவின் இடத்திற்கு ஏ.எல்.ஏ. அஸீஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் செய்தியை கடந்த ஒருமாத காலத்திற்கு முன்பாகவே ஆதவன் பிரசுரித்திருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37வது அமர்வு இம்மாதம் 26ம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 23ம்திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்குள்ளாக ஏ.எல்.ஏ. அஸீஸ் தமது கடமைகளை பொறுப்பேற்பார் என வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வெளிவிவகார அமைச்சின் பல்வேறு பதவிகளை வகித்தவரான அஸீஸ் ஆஸ்திரியாவிற்கான இலங்கைத்தூதுவராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
athavan