கடந்த இரவு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களால் அம்பறையில் உள்ள ஜும்மா பள்லிவாயல் தாக்கப்பட்ட விடயம், அதே போன்று முஸ்லிம்களுடைய உணவக கடைகள் சேதமாக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான நிலைமை அங்கு பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் இவ்வாறான சம்பவங்களை நினைத்து நாபீர் பெளண்டேசன் மிகவும் கவலையடைவதோ செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாகவும் அதன் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.
அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டு ஒரு சில தினங்களில் இடம் பெற்றுள்லதால் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரத மந்திரியாகவும் சட்டம் ஒழுங்கு மறுசீரமைப்பு அமைச்சராகவும் இருக்க கூடிய ரணில் விக்ரமசிங்க குறித்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு சம்பவத்துக்கு காரணமாக இருந்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என வேண்டி நிற்கின்றது. அத்தோடு பொலிஸ்மா அதிபர் இந்த செயற்பாட்டிற்கு பக்கசார்பின்றி நீதியை நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.
அத்தோடு இவ்வாறான நிலைமை தொடருமாக இருந்தால் இந்த நாட்டில் என்றும் இல்லாதவாறு ஐக்கிய தேசிய கட்சி பின்னடைவை சந்திக்கும் என்பதே முக்கிய அரசியல் எதிர்வு கூறலாக இருக்கின்றது. அதே நிலையில் அம்பாறை மாவட்டத்தில் இருக்க கூடிய அரசியல் வாதிகள் உடனடியாக களத்தில் இறங்கி பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு நாபீர் பெளண்டேசன் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது என்பதனை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
அதே போன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை குறித்த சம்பவம் தொடர்பாக மிகவும் சானக்கியமாக பிரதம மந்திரி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துறையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அறிய கிடைக்கின்றது. ஆகவே குறித்த பிரச்சனையினை விரிவு படுத்தாமல் உடனடியாக சுமூகமான நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு சம்பந்தபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிடில் இது ஒரு பாரிய அரசியல் பின்னடைவினை இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்படுத்தும். ஆகவே மீண்டும் தவறிழைக்க இடமளிக்க கூடாது என்பதனை வேண்டி நிற்பதாக கூறும் அதே வேளையில் நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் குந்தகம் விளைவிக்க கூடிய இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் ஏற்படாமல் அரசாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என நாபிர்பௌண்டேசன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துளது.குறித்த அறிக்கையில் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.