பிரிக்கப்பட்ட அம்பகமுவை பிரதேச சபையில் நான்கு வட்டாரங்களில் மாத்திரம் தமிழ் முற்போக்கு கூடடணி நேரடியாக போட்டியிட்டு ஏனைய ஒன்பது வட்டாரங்களிலும் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி நேரடி வேட்பாளர்களுக்கு தமது ஆதரவை வழங்குகின்றது. இதே நேரம் எல்லா வட்டாரங்களிலும் தமிழர்களை களம் இறக்கியிருக்கிறோம் என தமிழ் இனவாதம் பேசும் கும்பலும் களம் இறங்கியுள்ளது. அம்பகமுவையில் அவர்களின் நிலைப்பாடு வேடிக்கையானது. மூன்று சின்னத்தில் பிரிந்து நின்று இனவாதத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றனர். நாம் மூன்று பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து உங்களின் வாக்குகள் சிதறடையாத வகையில் ஒரு சின்னத்தை உங்களுக்கு தெரிவாகக் கொடுத்துள்ளோம். அதுவே உங்களது வட்டார பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான முதல் ஏற்பாடு. எனவே யானைச்சின்னத்திற்கு விழும் ஒவ்வொரு வாக்கும் மூன்று பிரதான கட்சிகளின் வாக்குகள் என்கின்றதன் அடிப்படையில் உங்கள் வாக்குகளையும் வழங்கி அதனை மேலும் வலுவாக்கி அம்பகமுவை பிரதேச சபையில் தமிழ், சிங்கள மக்களின் சகோதரத்துவத்தை உறுதிசெய்வோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அம்பகமுவை பிரதேச சபைக்கு போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடவளை, ரொசல்ல, பன்மூர் பகுதிகளில் பிரசாரக் கூட்டங்களிலேயே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.
கடந்த 25 வருடகாலமாக இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மலையகத் தமிழர் வாழ்ந்து சரித்திரம் படைத்த அம்பகமுவ பிரதேச சபை இப்போது மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மஸ்கெலியா, நோரவூட் பிரதேச சபைகள் நீங்கலான ஏனைய 13 வட்டாரங்கள் அடங்கிய பிரதேச சபையே இப்போது அம்பகமுவ பிரதேச சபை என அழைக்கப்படுகின்றது. இந்த சபை பிரிப்பு நடிவடிக்கைகளின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியினருடன் கூட்டாக இணைந்து குரல் கொடுத்தவர் அம்பகமுவை தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.பியதாச. பாராளுமன்றிலும் மாகாண சபைகள் உள்நாட்டு அமைச்சிலும் இடம்பெற்ற பேச்சுவாரத்தைகளில் எம்மோடு இணைந்து எமது மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஒத்துழைத்தார். அதன்படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நுவரெலியா அம்பகமுவை, பிரதேச சபைகள் ஆறாக பிரிக்கப்படடன.
இதன்போது கிளம்பிய இனவாதக் கும்பல் அம்பகமுவையில் இருந்து மஸ்கெலியா பிரதேச சபைக்கு மாற்றம் பெற்ற சீத்தகங்குல எனும் வட்டாரம் சிவனொளிபாதமலைக்கு அடிவாரத்தில் இருப்பதனால் தமது உரிமைகள் மீறப்படுவதாகவும் தமிழர்களுக்கு தாரை வாரத்துக் கொடுக்கப்பட்டதாகவும் வழக்குத் தொடர்ந்தனர். அன்று நாங்கள் தெளிவாகச் சொன்னோம். சிவனொளிபாத மலை அடிவாரம் மாத்திரமே சீத்தகங்குல வட்டாரத்திற்கு உரியது. ஆனால் எமது பிரதேச சபை பிரிப்பு நடவடிக்கையை முடக்க வேண்டும் என எண்ணிய இனவாதக் கூட்டம் சிவனொளிபாதமலை தமிழர்களுக்கு தாரைவாரத்துவிட்டதாக கோஷம் எழுப்பியது. நீதிமன்றில் வழக்கமு; தாக்கல் செய்தது. இன்று நீதிமன்றம் அவர்களின் கோரிக்கை நியாயமற்ற்து என தீர்ப்பளித்து எமக்கு நீதி கிடைத்துள்ளது. ஆனால் வழக்குத் தொடர்ந்த இனவாத ‘தாமரை மொட்டு’ கும்பலுடன் இணைந்து தமிழர்கள் என நெற்றிப்பட்டை இட்டோர் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வருவது எத்தனை கேவலமானது என்பதை அம்பகமுவை பிரதேச மக்கள் உணர வேண்டும். அதேநேரம் தமிழில் சேவலுக்கும், சிங்களத்தில் வெற்றிலைக்கும் கேட்கும் இன்னுமொரு கூட்டமும் இருக்கிறது.
நாம் இனவாதிகள் இல்லை. அம்பகமுவை, மஸ்கெலியா பிரதேச சபை பிரிக்கப்பட்டவேண்டும் எனும் கோரிக்கை மக்கள் தொகை அடிப்படையிலானது. இன அடிப்படையில் அல்ல என்பதை எடுத்துரைத்தோம். ஆனால், அதனை இனவாதக் கண்ணோட்டத்துடன் அணுகியவர்களும் அவர்களுடன் இணைந்து இப்பிரதேசத்தில் தமிழர்களும் தமிழ் மக்கள் மத்தியில் வாக்குகளைக் கேட்டுவர வெட்கப்படவேண்டும். மக்கள் அவர்களை நிராகிரிக்க வேண்டும். நான் அம்பகமுவையில் மாத்திரமல்ல பெல்மதுளை சென்று குட்டாப்பிட்டிய- நாரங்கொட வட்டாரத்தில் வாழும் தமிழர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக் வேண்டும் என்று அங்கு சென்று பிரச்சாரம் செய்தேன். காரணம், நாம் இனவாதிகள் இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும். அங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்தவும்; எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபைகளை பிரித்துக்கொடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் யானைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.