பைஷல் இஸ்மாயில் -
இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று காலை (04) தேசிய கொடியேற்றும் நிகழ்வும், விஷேட துஆப் பிரார்த்தனையும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் கே.எல்.அஸ்லம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வைத்தியர்களான ஐ.எல்.அப்துல் ஹை, எம்.பி.எம்.றஜீஸ், எஸ்.முஹம்மது றிஷாட், பஸ்மினா அறூஸ், மற்றும் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோணாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாயல் பேஷ் இமாம் ஏ.ஆர்.முஹம்மது மௌசூம் மௌலவியினால் விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டு, விடுதியில் தங்கி சிகிச்சை பெருகின்றவர்களுக்கு இனிப்புப் பொருட்கள் வழங்கி வைக்கபட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.