கிண்ணியா பவட்டி விஷனினின் (Kinniya Poverty Vision) புதிய காரியாலய திறப்புவிழா


Rasad Mohamedடந்த சில வருடங்களாக பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான கிண்ணியா பவட்டி விஷனினின் (Kinniya Poverty Vision) புதிய காரியாலய திறப்புவிழா நிகழ்வு இன்று 25.02.2018 பணிப்பாளர் எஸ். சாஜஹான் தலைமையில் கிண்ணியா அல் - அக்ஸா வீதியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிண்ணியா நகர சபையின் ரஹ்மானியா, சின்னக் கிண்ணியா வட்டார உறுப்பினர் எம்.எம். மஹ்தி அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் பல சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றிய எம்.எம். மஹ்தி அவர்கள் எதிர்வரும் காலங்களில் தமது கிண்ணியா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுடன் மாத்திரம் தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்ளாமல் தனது பதவியை சமூக சேவை எனக்கருதி கல்வி, கலாசாரம், ஆன்மிகம், வாழ்வாதாரம் போன்ற அணைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடையக்கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தான் முழு மூச்சாகச் செயற்படுவேன் என்ற உறுதி மொழியையும் அளித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -