முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டியாக கல்முனை உள்ளது. -எச்.எம்.எம் ஹரீஸ்-

எம்.என்.எம்.அப்ராஸ்-கல்முனை-

 ந்தத் தேர்தலை சமூகம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பது தான் இன்று எல்லோர் மத்தியில் உள்ள கேள்வியாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார். 

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச்சின்னத்தில் போட்டியிடும் கல்முனை-12ம் வட்டார வேட்பாளர் எம்.எஸ்.எம்.பழில் அவர்களின் தேர்தல் பணிமனை திறப்பும்,தேர்தல் பிரச்சாரமும் கூட்டமும் (2018/01/11) ஆம் திகதி இடம்பெற்றது.
காரியாலய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில்:

ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் இந்தக் கல்முனைத் தொகுதி, இவ் நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டியாக உள்ளது. மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் வந்த போது இந்தக் கல்முனைக்கென சிந்திக்கவில்லை இந்த நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்காய் அவர் சிந்தித்து இந்த சமுகத்தை இவ் நாட்டில் ஓர் தலைமைத்துமிக்க சமூகமாக மாற்றி விட்டுதான் சென்றார்.

அவ்வாறே இவ் நாட்டிற்கே இவ் கல்முனைக்கே முகவரி கொடுத்தார். இவ் தேர்தலைப்பொறுத்த மட்டில் கல்முனை என்பது முஸ்லிம் சமூகத்திற்குரிய ஓர் முக வெற்றிலை இதை யாரும் மறுக்க மாட்டர்கள் இதனை நம் நாட்டின் ஜனாதிபதி,பிரதமர் ஏன் சர்வேதச சமூகம் கூட மறுக்க மாடடார்கள் எத்தனையோ சர்வேதச தலைவர்கள் இங்கு வானுர்த்தி மூலம் வந்து பேச்சு வார்த்தை நாடாத்தி விட்டு முஸ்லிம்ககளின் ஓர் தலைநகர் கல்முனை தான் என சொல்லிய வரலாறு உண்டு.

மேலும் இவ் கல்முனையை நங்கள் ஆட்சியை கைப்பெற்றவேண்டும் என்பதற்காக பல தியாகங்கள் செய்து விட்டு வந்துள்ளோம் என்றார். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்களும் போட்டியுடும் வேடப்பாளர்காளான கட்சியின் 12ம் வட்டார வேட்பாளர் எம்.முஹீஸ்,13ம் வட்டார வேட்பாளர் எம். எஸ்.எம் .நிசார்,14ம் வட்டார வேட்பாளர் ஏ.சி.ஏ.சத்தார்,15ம் வட்டார வேட்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.ரோசன் அக்தார் கட்சியின் பட்டியல் வேட்பாளர் பி.டி.ஜமால்,மஸூரா குழு தலைவர் ஏ.சி .காஸிம்(கரிம் ஹாஜி) கல்முனை ஆசாத் பிளாஸா உரிமையாளரும்,பிரபல வர்த்தகருமான அல்ஹாஜ் கபூல் ஆஸாத், மற்றும் பொது மக்கள் பலர் கொண்டனர்








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -