முஸ்லிம் காங்கிரஸை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது!!



ஹஸ்பர் ஏ ஹலீம்-

"மயில்,குதிரையில் வந்து தியாகத்துடன் வந்த பேரியக்க கட்சியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது:சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சின்னக் கிண்ணியா,ரகுமானியா வட்டார வேட்பாளர் சட்டத்தரணி அமீன் முஜீப்"


சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எனும் பேரியக்க கட்சி என்பது பல்வேறு தியாகங்களுடன் வந்த கட்சியாகும் இதனை மயிலும் குதிரையிலும் வந்து சிலர் அழிக்க முற்படுகின்றனர் இந்த பேரியக்க கட்சியை எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாது என சின்னக் கிண்ணியா,ரகுமானியா வட்டாரத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான சிரேஷ்ட சட்டத்தரணி அமீன் முஜீப் தெரிவித்தார்.நேற்று(19) சின்னக் கிண்ணியா ரஹ்மானியா சந்தியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில் இந்த தேர்தலை நாங்கள் எமது சமூகத்தின் வாக்குகளினால் வெற்றி கொண்டு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி கிண்ணியா நகர சபையை கைப்பற்றுவதன் ஊடாக எமது இந்த வட்டார மக்களுக்கு மாத்திரமல்ல முழு கிண்ணியாவுக்கும் நிரந்தர பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்று தேர்தலின் பின்பு மக்களை மறந்து விடுகின்ற அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் நான் மக்கள் படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் உணர்ந்தவன் நிச்சயமாக நகர சபை வெற்றியின் பின்பு ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மக்களுடைய துன்பங்களுக்கான நிரந்தர தீர்வினைப் பெற்று பொருளாதார சுமைகளற்ற பல்வேறு திட்டங்களை செய்வதற்கும் சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்புடனும் ஒரு சுபீட்சமான அழகான கிண்ணியாவாக கிண்ணியாவை மாற்றியமைப்போம்.இவ்வாறான தேவைகளுக்கு அதனை அமுல்படுத்த அரசியல் அதிகாரம் தேவை இந்த அதிகாரத்தை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கு வழங்குவதன் ஊடாக கிண்ணியா நகரை சிறப்பு மிக்க அபிவிருத்தியில்பாரிய திட்டங்களை கொண்டு எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள 33 விடயங்களையும் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான அதிக சாத்தியங்கள் காணப்படுகிறது இலகுவாக அந்த திட்டங்களை நடை முறைப்படுத்த முடியும்
இந்தப் பிரதேசத்தில் அதிகமான மீனவர்கள் வாழ்கிறார்கள் மீன்பிடியில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது இவ்வாறான பிரச்சினைக்கு சுமூகமான தீர்வினை முன்வைத்து கிண்ணியா துறையடிப் பாலத்தில் துறைமுகமொன்றை அமைப்போம் கிண்ணியா பாலத்தை அமைத்த எமது பிராளுமன்ற உறுப்பினருக்கு துறைமுகத்தை அமைப்பது பெரிய விடயமல்ல .இதற்கு முன் நான் கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளராக இருந்து கொண்டு பல்வேறு சேவைகளை செய்திருக்கிறேன் நகர சபைக் கட்டிடம் ,நூலகங்கள்,திண்மக் கழிவகற்றல்,வீதிகள் அமைத்தல் போன்றவற்றுக்கான நிதிகளை சர்வதேச நிறுவனங்களான யூ.எஸ்.எயிட்,ஆசியா மன்றம்,நெல்சிப்,சிடா,ஜீ.டீ.இஸட் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களுடன் முழு மூச்சாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளோம் இன்னும் பல அபிவிருத்திகளை மக்களின் நலன் கருதிய திட்டங்களை வகுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன் இதை விடுத்து சிலர் எனக்கு குடும்பம் இல்லை கோத்திரம் இல்லை என போலிப் பிரச்சாரங்களை இவ்வட்டாரத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் கூறி வருகின்றனர் இவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன் இப் பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் எனது உறவுகள் மீனவக் குடும்பம் கூலித் தொழிலாளிகள் அனைவரும் எனது குடும்பம் என்பதை மறந்து விடாதீர்கள் எனவே சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து நிரந்தர தீர்வை பெற்று சுமூகமான கிண்ணியாவாக சுபீட்சமிக்க கிண்ணியாவாக மாற்றியமைப்போம் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -