ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு மரண அச்சுறுத்தல் வரக்கூடும் - மஹிந்த

பினைமுறி மோசடி அறிக்கையில் வெளியான தகவல்கள் காரணமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு மரண அச்சுறுத்தல் வரக்கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்ட இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன இடம்பிடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி ஊழல் மோசடிகளுக்கு இடமளிப்பவரல்ல எனவும் அவர் நாட்டிற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு எனவும் அவரை பாதுகாப்பது அனைவரினதும் கடமை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

source; dailycelon 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -