"இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் நிருவாகம் கலைக்கப்பட்டது" IMPORTMIRROR MEDIA

Importmirror Media Network 
இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் ஏழாவது வருட நிறைவில் இருந்து கொண்டிருக்கும் இத்தறுவாயில் இணையத்தின் பரிணாமம் இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் அதற்கான புதிய புதிய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கை கருத்தில் கொண்டு இதுவரை இயங்கிவந்த நிருவாகம் இன்று(26.12.2017) மாலையுடன். கலைக்கப்பட்டன. 

அத்துடன் நிருவாகம் கலைக்கப்பட்டதுடன் அட்டாளைச்சேனையில் தலைமைக் காரியாலயம் அமைத்து இயங்கிவந்த இணையக் காரியாலயம் நாளை 27.12.2017 முதல் கொழும்பில் அமையப் பெறவுள்ளதுடன் அங்கேயே புதிய நிருவாகமும் தெரிவு செய்யப்படவுள்ளன. 

எனவே இனிமேல் கொழும்பில் இருந்து இம்போட்மிரர் இணையத்தின் செய்திகள் மற்றும் சிகரம் வானொலி ஆகியன வழமை போன்று இயங்கும் என்பதனை இதன் வளர்ச்சியின் பங்காளர்களான பெருமதிப்புக்குரிய ஊடகவியலாளர்கள், இதன் வெற்றிக்கு பெரும்பங்காற்றும் வாசகர்களுக்கும் அன்புடன் அறியத்துகிறோம். 

புதிய நிருவாகம் அறிவிக்கும்வரை உங்கள் விளம்பரங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளை காரியாலய தொலைபேசி இலக்கத்துடனும் மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் முன்னைய நிருவாகத்துடன் செய்து கொள்ளும் எந்த உடன்பாடுகளுக்கும் இம்போட்மிரர் பொறுப்பேற்காது என்பதனையும் மனவர்த்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலதிக தொடர்புக்கு.. 
077 61 444 61 
வட்சப்- 077 12 76 680 
news@importmirror.com
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -