கடந்த வாரம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமனம் செய்யப்பட்ட முதலாவது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் (02.12) அன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது இக்குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உரிய தீர்வினை பெற்றுதறுவதாக பாரளுமன்ற உறுப்பினர் அவர்களினால் உறுதியளிக்கப்பட்டது.