அண்மையில் அம்பாறை கச்சேரியில் உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள் வேட்புமனுக்களுக்கான ஆட்சேபனைகள் பற்றிய அறிவுப்புக்களை சிங்களத்தில் கூறியவைகளை அதனை தமிழில் மொழிபெயர்த்த உத்தியோஸ்தர் அவைகளை அவ்வப்போது தப்பும் தவறுமாக பலமுறை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.
இதனை அவதானித்துக் கொண்டிருந்த சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் எவரும் எதிர்பாராத விதத்தில் எழுந்து நின்று குறித்த அதிகாரியின் பிழையான மொழி பெயர்ப்புக்களை ஆட்சேபித்து அவைகளை சுட்டிக்காட்டி சரியான மொழிபெயர்ப்புக்களை தமிழ் பேசும் மக்கள் சார்பாக வழங்குமாறு வேண்டிக் கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட குறித்த உயர் அதிகாரி குறிப்பிட்ட தவறுகளுக்காக மனம் வருந்துவதாகவும் தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாகவும் அதற்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் பிழைகளை திருத்தி சரியான தமிழ் மொழிபெயர்ப்புக்களை வழங்குமாறு குறித்த அதிகாரியிடம் வேண்டிக்கொண்டார். சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்களின் துனிச்சலான இச்செயற்பாடு அங்கு வந்திருந்த முக்கிய அரசியல் பிரமுகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டார் என்பதை நானும் தனிப்பட்ட முறையில் அதனை பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன்.