பணிப்பாளராக வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

பைஷல் இஸ்மாயில் -

ம்பாறை, நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை (13) பொறுப்பேற்றுக் கொண்டார்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த 03 அரை வருடங்களாக வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த நிலையிலையே இவருக்கான இந்தப் பதவி உயர்வு கிடைக்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சுகாதார, சதேச போசனை பிரதி அமைச்சர் பைசால் காசிமின் பிரத்தியேகச் செயலாளர் எம்.ரீ.எம்.சப்றாஸ் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

கடந்த பல வருடங்களாக ஆயுர்வேத சுதேச வைத்தியத்துறையில் பல வைத்திய சேவைகளைச் செய்த இவர், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை 03 அரை வருடங்களும் மற்றும் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் 7 வருடங்களும் கடந்த பல வருடங்களாக வைத்திய அத்தியட்சகராக நிர்வாகம் வகித்து வந்தமையும், இவர் வைத்திய நிருவாக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டம் பெற்றுள்ளதுடன் கட்டார், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இத்துறையில் விஷேட பயிற்சிகளையும் நிறைவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -