ஏறாவூர் எஎம் றிகாஸ் -
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வுப் பேரணியொன்று 07.12.2017 ஏறாவூரில் நடைபெற்றது.
இளவயது திருமணம் மற்றும் போதைப் பொருள் பாவனையை தவிர்த்து கல்வியில் மேம்பட்ட சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் முஹாஜிரீன் கிராமத்தில் இப்பேரணி நடைபெற்றது.
சுலோகங்கள் மற்றும் பதாதைகளை ஏந்திய சிறுவர்கள் முஹாஜிரீன் கிராமத்தின் பிரதான பாதைகளில் பேரணியாக வந்தனர்.
பேரணியைத் தொடர்ந்து அறிவூட்டல் செயலமர்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. மீள்குடியேற்றப் பிரதேசமான முஹாஜிரீன் கிராமத்தில் சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அல்- அமான் வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றார்களும் கலந்துகொண்ட இப்பேரணியில் கிராம சேவையாளர் நிருவாக உத்தியோகத்தர் எம்ஐ. கபீர் முகம்மட் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய சமாதானக்கல்வி இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அஜந்தா தவசீலன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்எச். சபூஸ் பேகம், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உதவியாளர் ஐ. நபீலா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். மபாஹிறா, உளவளத்துறை உதவியாளர் ஏ. ஆமினா, நிவாரண சகோதரி எம்எப். றிகானா, சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ. கலைவாணன் மற்றும் கலாசார உத்தியோகத்தர் ஏஎம். நளீம் நளீமி ஆகியோர் உள்ளிட்ட பலர் இணைந்துகொண்டனர்.