க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத் தொழிலாளர்கள் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்டத்திற்கு அண்மித்த பகுதியில் வீதியில் இறங்கி 04.12.2017 அன்று காலை 9 மணியளவில் ஆர்பாட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.
லிந்துலை பெயார்வெல் தோட்ட நபர் ஒருவர் லோகி தோட்டத்திற்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து கடையொன்றை அமைத்துள்ளார்.
இவ்வாறு அமைக்கப்பட்ட கடையில் மரக்கறிகள் விற்பணை செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகமாக அனுமதியை இவர் பெற்றிருந்துள்ள போதிலும் லோகி தோட்ட நிர்வாகத்திற்கு சொத்தமான இந்த இடத்தை லோகி தோட்ட நிர்வாகம் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என கோரியே லோகி தோட்ட தொழிலாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்தோடு தற்காலிக வியாபாரத்திற்காக ஆக்கிரமித்துள்ள கடை அமைந்துள்ள பகுதிக்கு மின்சாரம் பெற்று எல்லையிடப்பட்ட வேலியையும் கடை உரிமையாளர் போட்டு சொந்தமாக்க முயற்சியினை மேற் கொண்ட விடயம் தெரியவந்ததால், இந்த இடத்தை லோகி தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வழியுறுத்தியும் போராட்டத்தை மேற்கொண்டதாக ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பி வீதியின் ஓரத்தில் கீழே அமர்ந்து சுமார் 3 மணித்தியாலயங்கள் போராட்டத்தை நடத்தியமை குறிப்பிடதக்கது.




