கிண்ணியா நகர சபையின் பாரிய டெங்கு ஓழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு



ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு பரவும் அபாயத்தைத் தடுக்கும் நோக்கில் கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமாகிய என். எம். நௌபீஸ் தலைமையில் சனசமூக நிலையங்களின் தலைவர், செயலாளர் ஆகியோருடனான கலந்துரையாடல் (13.12.2017) இடம்பெற்ற போது அதில் தற்போது நகரசபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசேட வேலைத்திட்டங்களின் அடிப்படையில் சனசமூக நிலையங்களின் ஆதரவுடன் சிரமதானங்கள் மேற்கொள்வதென தீர்மாணிக்கப்பட்டிருந்தது.

கிண்ணியாப் பகுதியில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட டெங்கு தாக்கம் காரணமாக பல உயிரிழப்புச் சபவங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்தும் இனிமேலும் டெங்கு வராத வண்ணம் முன்கூட்டிய சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இப் பாரிய டெங்கு ஒழாப்பு வேலைத்திட்டம் இடம்பெறுவதாகவும் இது தொடர்ந்தும் கிண்ணியா நகர சபையின் ஊடாக இன்னும் பல நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக நடைபெறும் என கிண்ணியா நகர சபையின் செயலாளர் என். எம்.நௌபீஸ் இதன்போது அப்பகுதியில் சந்தித்த பொதுமக்களிடம் தெரிவித்தார்.

அதனடிப்படையில் கிண்ணியா நகர சபையின் வழிகாட்டலில் கடந்த சனிக் கிழமை 16.12.2017 அன்று பைசல் நகர் பிரதேசத்தில் டெங்கு சிரமதானம் நடைபெற்றிருந்தது. அடுத்த கட்டமாக இன்று (22) வெள்ளிக் கிழமை எகுத்தார் நகர் சனசமூக நிலையத்துடன் இணைந்து எகுதார் நகர்
பிரதேசத்தில் டெங்கு சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. இதில் நகரசபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் , நிருவாக உத்தியோகத்தர் திரு. பாயிஸ், பொதுச் சுகாதார பரிசோதகர் திரு. நௌசாத், தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு. றாசித், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -