கிழக்கு மாகாண ஆளுனர் நேரடியாக சென்று பார்வையிட்ட சம்பூர் சூடைக்குடா ..


அப்துல்சலாம் யாசீம்-

கிழக்கு மாகாண ஆளுனர் நேரடியாக சென்று சம்பூர் சூடைக்குடா குன்றன் தூர் மத்தள மலை திருக்குமரன் ஆலயத்த்தின் பிரச்சினையை பார்வையிட்டார்

சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூடைக்குடா குன்றன் தூர் மத்தள மலை திருக்குமரன் ஆலயத்த்தினை சுற்றி துப்பரவு செய்து சமப்படுத்திய போது தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமானது என்ற பிரச்சினை ஒர் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்டது இப் பிரச்சினையினை ஆராய்வதற்காக இன்று (22) காலை 11 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம உட்பட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார , கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரிகள் பிரதேச செயலாளர் என பலர் இவ்விடத்துக்கு சமுகமளித்திருந்தார்

இதன் போது ஆளுனர் அவ் ஆலையத்தினை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினார் மக்கள் அவர்களுடைய பிரச்சினை ஆளுனரிடம் கூறினர்கள்

இதேன் போது ஆளுனர் உரையாட்டுகையில் 4 வருடங்களாக ஆலயம் அமைக்கப்பட்டு பூசைகள் செய்து வழிபட்டு வருவதை அவதானிக்க முடியும் இதற்கு முன்னால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி கிணறு அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார் அதற்கான நிதியினை பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது அவ்வேலை பிரதேச சபையினால் செய்யப்படும் என கூறினார்

மேலும் இவ் ஆலயத்தில் மத வழிபாடுகள் செய்வதற்கு எந்த வித தடையும் இல்லை புணர் நிர்மானபணிகளை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தாார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -