ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஹாபிஸின் குருஷேத்திர போரும்...

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- 

ள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னராக அட்டாளைசேனைக்கு தேசியப் பட்டியல் எம்.பி வழங்கப்படும் என்ற தனது நம்பிக்கையை கிழக்குமாகாண முன்னாள் அமைச்சர் நஸீர் மீண்டும் வெளியிட்டுள்ளார். அவர் போன்றே இதே நம்பிக்கையில்தான் அந்தப் பிரதேச மக்களும் உள்ளனர். 

ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களும் இதுதொடர்பில் வாக்குறுதியை வழங்கி, அந்த மக்களின் அபிலாஷையைநிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பொதுவில் காணப்படுகிறது. அவ்வாறே அதுவிரைவாக நடைபெறவும் வேண்டும்.

ஆனால், இந்த விடயத்தில் ஒரு சிக்கல் நிலைமை தற்போது எழுந்துள்ளது. கிழக்குமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள்,தனக்கே தேசியப்பட்டியல் எம்.பி வழங்கப்பட வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை கட்சித் தலைமையிடம் நேரடியாக முன்வைக்காவிட்டாலும் அவர் அந்தப் பதவிதனக்கே கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமை தெட்டத்தெளிவாகிறது.

ஹாபிஸ் நஸீர் அஹமதை தேசியப்பட்டியல் எம்பியாக நியமிக்கும் விடயத்தில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் எதிர்ப்புகள் கிளம்பினாலும் மத்தியஅரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்திலுள்ள முக்கியஸ்தர்கள் அவருக்கே தேசியப்பட்டியலில் இடம் வழங்கி அவரை எம்பியாக்க வேண்டுமென்ற விடயத்தில் தீவிரமுனைப்புக்காட்டி வருகின்றனர் என்ற உண்மையையும் இங்கு கூறத்தான்வேண்டும். 

இந்த அழுத்தமானது சிலவேளைகளில் கட்சியின் தலைவரான கௌரவரவூப் ஹக்கீம் மீதும் திணிக்கப்பட்டிருக்கலாம்.

இதேவேளை, “நீங்கள் உங்கள் கட்சி சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாகவாருங்கள். நாங்கள் உங்களுக்கு பிரதியமைச்சர் பதவி ஒன்றைத் தருவோம்” என்பதுஹாபிஸ் நஸீர் அஹமதுக்கு மத்திய அரசின் ஆளும் தரப்பில் வழங்கப்பட்டவாக்குறுதி.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர், மட்டு. மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் அலி சாஹிர் மௌலனாவுடன் இடம்பெற்ற மோதலுடன் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது கட்சிக்கான தேர்தல் பணிகள், அரசியல் செயற்பாடுகள்அனைத்தையும் கைவிட்டவராக அல்லது இடைநிறுத்தியவராகக் காணப்படுகிறார்.தற்போது அவர் மக்கா சென்றுள்ளார். 29 ஆம் திகதிக்குப் பின்னரே நாடுதிரும்புகிறார். அதன் பின்னர் அவர் தான் சார்ந்த கட்சியின் அரசியல்செயற்பாடுகளில் இணைவாரோ தெரியாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தைக் கொண்டிருக்காதஹாபிஸ் நஸீர் அஹமட், எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுவெற்றி பெற்றாலும் மீண்டும் அவர் முதலமைச்சராக வர முடியாது என்பதுநிர்ணயம் செய்யப்பட்ட உண்மை. 

அதேவேளை, நாடாளுமன்ற தேர்தல் என்பதுகண்ணுக்கு எட்டாத தொலை தூரத்தில் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில்தான்அவர் தற்போது தேசியப் பட்டியல் ஊடாக மத்திய அரசில் இணைந்து கொள்ளும்விருப்பத்தைக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படையான உண்மை. அதன்பின்னர் வரக் கூடிய பொதுத் தேர்தல் ஒன்றில் அவரை தேசியப்பட்டியல் ஊடாகநியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்தயாராகவுள்ளனர். 

அதுவரையில் ஓர் இடையீட்டு நடவடிக்கையாக அவரைஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் ஊடாக எம்.பியாக நியமித்துஅவருக்கு ஒரு பிரதியமைச்சர் பதவி வழங்க அரசு தயாராகவுள்ளது.

இந்த தகவல்கள் எனக்கு கிடைத்தவுடன் நேற்று முன்தினமிரவு அவருடன்தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயங்களைக் கூறி, இதன்உண்மைத்தன்மையை தெளிவுபடுத்துமாறு நான் கேட்டுக் கொண்டேன். இதற்கானபதிலை வழங்குவதற்கு அவர் தயக்கமடைந்த நிலையில், தான் நாடுதிரும்பியவுடன் இந்த விவகாரம் தொடர்பில் பேசுவதாகத் தெரிவித்தார்.இருப்பினும் நான் கூறிய விடயங்களை அவர் மறுக்கவில்லை.

இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமை உண்மையில் எழுந்தால் அமைச்சர்ஹக்கீம் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பான நிலைக்கு தள்ளப்படுவார். இந்தவிடயத்தை அவர் மிக நிதானமாகத் தீர்த்து வைக்க வேண்டும். ஒரு புறம் நாகம்…மறுபுறம் வேடன் என்ற நிலையில் தீர்க்கமான முடிவை அவர் எடுக்கவேண்டியவாராகவுள்ளார்.

ஹாபிஸ் நஸீர் அஹமதுக்கு தேசியப்பட்டியல் எம்.பி வழங்காவிட்டாலும்பிரச்சினை, வழங்கினாலும் பிரச்சினை என்ற நிலைமை தோன்றும் போது ஏதோஒரு தீர்மானத்துக்கு வந்தாலும் ஒரு தரப்பலிருந்து அவர் அதிருப்தியை எதிர்கொள்ளநேரிடும்.

இதேவேளை, ஹாபிஸ் நஸீருக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்காதுஅட்டாளைச்சேனைக்கு அதனை வழங்கும் பட்சத்தில் அதனை ஹாபிஸ் நஸீர் அஹமட் ஏற்றுக் கொண்டாலும் மனதளவில் அவர் அதனை வரவேற்பார் என்று கூறமுடியாது. இதற்கான அவரது அதிருப்தியின் பிரதிபலிப்புகள் தாமதமாகவெளியானாலும் அதன் விளைவுகள் விபரீதமாகவும் அமையலாம்.

 இந்த நிலையில்மத்திய அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையான ஹாபிஸ் நஸீரின் செயற்பாடுகள் ஒருதரப்பால் பாலூட்டி வளர்க்கப்படுவதுடன் அவருக்கு உற்சாகத்தை வழங்குமென்றும்நம்பலாம்.

இவ்வாறானதொரு நிலைமை தோன்றும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸுக்குள் இன்னொரு பஷீர் அல்லது மற்றொரு ஹஸன் அலி உருவாதனைதடுக்க முடியாது போகலாம். இவர்கள் இருவரையும் விட மிகுந்த தலையிடிகொண்ட ஒருவராக ஹாபிஸ் நஸீர் அஹமட் மாறும் சாத்தியங்கள் நூறு சதவீதம்காணப்படுகின்றன என்பது மட்டும் உண்மை.

அதேவேளை, இதுவரை காலமும் தங்களுக்கு தேசியப்பட்டியல் எம்.பி கிடைக்கும்என எதிர்பாரத்துக் கொண்டிருக்கும் அட்டாளைச்சேனை மக்களையும் அமைச்சர்ஹக்கீம் அவர்கள் கைவிட முடியாது.

இந்த நிலையில், திருமலை மாவட்ட தேசியப் பட்டியல் எம்பியான தௌபீக்கினால்மட்டுமே கட்சியை பாதுகாக்க நிலைமையும் தோன்றலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -