பாலியல் பலாத்காரம் பெண்களுக்கு துப்பாக்கி வழங்க அரசு திட்டம்

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி துப்பாக்கி உரிமம் வழங்க இந்திய மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் சிவராஜ் சௌகானுக்கு அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் “வட மாநிலங்களில் அரச அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருப்பது கௌரவச் சின்னமாக கருதப்படுகிறது. இதற்காக மத்திய பிரதேசத்திலும் துப்பாக்கி உரிமம் பெற கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் எந்த மாநில அரசும் தற்போது எளிதாக துப்பாக்கி உரிமம் அளிப்பதில்லை. மாறாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் பாலியல் பலாத்கார குற்றங்களைத் தடுப்பதற்காக அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்த முயற்சிக்கு முதல்வரின் ஆதரவும் கிடைத்துள்ளது. இதில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் துப்பாக்கி உரிமம் கோரும்போது, அவர்களின் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அப்பெண்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -