மக்கள் தொடர்பில்லாத வேட்பளர்களை நியமித்த பிரதி அமைச்சரால் நிந்தவூர் படுதோல்வி அடையும் அவல நிலை..!

நிந்தவூர் ஹமீஸ்-

திர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிந்தவூர் பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் ஊரில் மக்களைத் தெரியாதவர்கள் அதிலும் பிரதி அமைச்சரின் குடும்பத்தினர் என்பதற்காக போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனுக்கு இடம்கொடுக்காமல் பழைய பாணியில் நாந்தான் நிந்தவூரின் ராஜா என்று களத்தில் இறங்கிய பிரதி அமைச்சர் கடந்த 2011ஆம் ஆண்டு தனது உறவினரை தவிசாளராக்க பெரும் முயற்சி மேற்கொண்டு முடியாமல் படுதோல்வி அடைந்தமை இந்த இடத்தில் சுட்டிக்காட்டப்படல் கட்டாயமாகும்.

ஆனால் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தன்னை தவிசாளர் என்று அறிவித்தால் களத்தில் இறங்கி தேர்தல் கேட்பதாக அறிவித்திருந்த நிலையில் மீண்டும் மாகாண சபை தேர்தல் வந்தால் அடுத்தவருக்கு சந்த்தர்ப்பத்தை வழங்கிவிட்டு போய்விடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் சந்தர்ப்பம் வழங்க முடியாது தன் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரைத்தான் தவிசாளராக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளமையானது நிந்தவூரில் கட்சி படுதோல்வி அடைய முற்பணம் செலுத்தியதைப் போன்றதாகும்.

எனவே எது எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் அதாவுல்லாஹ் காங்கிரஸ் போன்று குடும்ப ஆட்சிக்கு வித்திட்டால் கடைசியில் அனைத்து ஆதரவாளர்களும் மாற்று அணிக்கு செல்வதனை யாராலும் தடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை வந்தடையும் என்பதனை கட்சியின் தலைமை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே நிந்தவூரின் ஆட்சியை நாங்களே கைப்பற்றுவோம் என்று முன்னாள் தவிசாளர் தாஹீர் அறைகூவல் விட்டிருக்கும் இவ்வேளை இப்படி நடந்துள்ளமையும் நிந்தவூர் தேர்தல் களத்தில் ஒரு அச்சமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்றே கூற வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -