இந்து மதத்தை அவமரியாதை செய்த கிழக்கு ஆளுநரின் மனைவியின் செயலை கண்டித்த-அமைச்சர்-மனோ..

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி தீப்தி போகொல்லாகமவின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மனோ கணேசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

திருகோணமலையில் இந்து பக்தர்களை தீப்தி கடந்த வாரம் தூற்றிய சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தீப்தியின் செயற்பாடு நாட்டின் சகவாழ்விற்கு குந்தகம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை உத்தியோகத்தர்கள் கூட பாதணிகளை கழற்றிவிட்டு கோயிலுக்கு பிரவேசித்துள்ளனர் எனவும், தீப்தி இந்து மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.(சு.ஒ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -