க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் விடுதலை முன்னணி வலப்பனை, ஹங்குராங்கெத்த, நுவரெலியா, கொத்மலை, நோர்வூட், மஸ்கெலியா, அம்பகமுவ, அக்கரப்பத்தனை, கொட்டகலை ஆகிய பிரதேச சபைகளிலும், அட்டன் டிக்கோயா நகர சபையிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை 20.12.2017 அன்று நுவரெலியா பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தெரிவத்தாட்சி காரியலாயத்தில் கையளித்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளரும், ஜே.வி.பியின் ஆசிரியர் சங்க செயலாளருமான மஞ்சுள சுரவிர தலைமையில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமாரவிடம் வேட்பு மனுக்களை கையளித்தார்.

அதேவேளை நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசிய கட்சியில் நோர்வூட், மஸ்கெலியா, அம்பகமுவ ஆகிய பிரதேச சபைகளிலும், அட்டன் டிக்கோயா நகர சபையிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை20.12.2017 அன்று நுவரெலியா பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தெரிவத்தாட்சி காரியலாயத்தில் கையளித்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கே.கே.பியதாஸ தலைமையில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமாரவிடம் வேட்பு மனுக்களை கையளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -