உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சை குழுவில் போட்டியிடுவது தொடர்பில்


மு.இராமச்சந்திரன்-

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆலோசனைக்கமைய கபினட் அமைச்சுகாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தலைவர்கள் ஆதரவாளர்களை இல்லாதொழிக்கும் கைங்காரியத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ பி ரட்நாயக ஈடுபட்டு வருவதால் உள்ளூராட்சி சபை தேர்தலில் சுயேட்சை குழுவில் பேட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினரும் தலவாக்கலை லிந்துலை நரசபையின் முன்னால் தலைவருமாகிய அசோக்க சேமபால தெரிவித்தார்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சை குழுவில் போட்டியிடுவது தொடர்பில் 07.12.2017 அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்


கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற தலவாக்கலை லிந்துலை நகரசபையின் முன்னால் தலைவராகிய நான் மற்றும் நுவரெலியா மாநகர சபையின் முன்னால் உப தலைவர் திஸ்ஸ செனவிரத்தன கொத்மலை பிரசசபையின் உபதலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்ற வேற்பாளர்கள் பலருக்கு இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் நுவரெலிய மாவட்ட தலைவர் என கூறிக்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி. ரட்நாயக்க. இடமளிக்கவில்லை இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் ஆதரவாளர்களை இல்லாதொழிக்கும் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனஅவர்களின் ஆலோனைக்கமைய சீ.பி ரட்நயக்க அரங்கேற்றிவருவதாகவும் அசோக சோமபால தெரிவித்தார் மேலும்


இந் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபின் பலத்தை அதிகரிக்கும் வகையில் நாம் சுயேட்சை குழுவில் போட்டியிட தீர்மானித்துள்ளோம் என்றார்


இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் கீழ்மட்ட முக்கியஸத்தர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டத்தினருக்கு தெரிவித்துள்ளோம் ஆனால் எமக்கு தேர்தலில் போட்டியிடவாய்ப்பு கொடுத்தால் தான் விலகுவதாக. சி பி ரட்நாயக்க தெரிவித்து வருவதாக அறிய முடிகின்றது


கபினட் அமைச்சுபதவிக்காக மஹிந்த ராஜபக்ஷதலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியை காட்டிக்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி பி ரட்நாயக்க இரண்டூ வருடங்களில் பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் மத்தியில் வருவார் அப்போது மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவர் என்றார் தலவாக்கலை லிந்துலை உள்ளிட்ட நுவரெலியா மாவட்டத்திலுள்ள எமது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு நாங்கள் சுயோட்சை குழுவில் போட்டியிட தீர்மணித்தோம் எமது ஆதரவு தாமரை பொட்டுக்கும். மஹிந்த ராஜபஷ அவர்களின் தலைமைக்கு உண்டு எனவும் சுயேட்சை குழுவில் போட்டியிட்டு பெருவாரியான வெற்றியை பெருவோம் எனவும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -