க.கிஷாந்தன்-
அட்டன் கல்வி வலயத்தின் மிகவும் கஷ்டமான பாடசாலையான மஸ்கெலியா நல்ல தண்ணீர் பாடசாலையில் நடந்து முடிந்த தரம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் மாணவி செல்வமாணிக்கம் ஹொஸ்னி அனஸ்லிடா 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
அவருக்கும் அவருடன் சித்தி பெற்ற மேலும் எட்டு மாணவர்களுக்கும் கௌரமளிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஜெயபாலன் தலைமையில் 02.12.2017 அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஷ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் 191 புள்ளிகளை பெற்ற மாணவி ஹொஸ்னி அனஸ்லிடா அவர்களுக்கும், ஆசிரியர் அவர்களுக்கும் தங்கப்பதக்கத்தினையும், சான்றிதழினையும், நினைவுச்சினனத்தினையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.




