விவசாயக்காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்-முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கோரிக்கை

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை.ரொட்டவெவ கிராம விவசாயிகளின் விவசாய நிலங்களான சின்ன புளியம்குளம்.பெரிய புளியங்குளம் போன்ற விவசாயக்காணிகளை
தேர்தலுக்கு முன்னர் விடுவித்து தருமாறு மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ் எம் பைசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கோரிக்கையினை அதிமேதகு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- கடந்த யுத்த காலத்திற்கு முன்னர் ரொட்டவெவ விவசாயிகள் புளியங்குளம் பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் கடந்த அரசாங்கத்தினால் கமநெகும.மகநெகும திட்டங்களின் ஊடாக விவசாயிகளின் விவசாயத்தினை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு குளங்கள் புணரமைப்பு செய்யப்பட்டதாகவும் தற்போது வன இலாக்கா அதிகாரிகள் அவ்விவசாய காணிகளுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அரசியல் வாதிகள் பல தடவைகள் பேசியும்‍‍ இன்னும் மக்களுக்கு சிறந்த பெறுபேற்றினை தரவில்லையெனவும் அவ்விவசாய காணியில் விவசாயம் செய்ய அனுமதியை பெற்று தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் தேர்தல் நடை பெற முன்னர் அதிமேதகு ஐனாதிபதியாகிய தங்களுடைய ஆதரவினை விவசாய மக்களுடைய நலன் கருதி வழங்குமாறும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -