அட்டாளைச்சேனை கள நிலவரம் மிக மோசம்! பழீல் BA பேட்டி.

ட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுதல் அதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்தல் போன்றமை தொடர்பில் நிந்தவூர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று (07) நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகளால் கட்சியின் பல முக்கியஸ்தர்கள் வெளியேறிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரான எஸ்.எல்.எம். பழீல் பீஏ அவர்களை நான் தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவித்தவற்றை அவரது குரலில் பதிவிடுகிறேன்.- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

1.அட்டாளைச்சேனை கள நிலவரம் மிக மோசமாகியுள்ளது.

2.தொடர்ந்தும் நாங்கள் வோட்டை மட்டும் கேட்டுப் போடும் சமுதாயமாக இருக்க முடியாது.

3. தலைமைத்துவமும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று எம்பிக்களும் கடந்த காலத்தில் பல தேர்தல் மேடைகளில் பல வாக்குறுதிகளைத் தந்திருந்தனர். ஆனால், இந்த இரண்டரை வருட காலத்தில் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளில் எதனையுமே நிறைவேற்றவில்லை என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர்.

4.வீதிகளில் செல்லும் போது முகத்தில் சீலையைப் போட்டுக் கொண்டு செல்லும் நிலை எங்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் 
சித்தீக் காரியப்பர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -