எஸ் .எல். அப்துல் அஸீஸ்-
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி விசேட வேலைத்திடடத்தின் கீழ் கல்முனையில் 6 மில்லியன் பெறுமதியான வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்படடன.
ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், சட்டத்தரணியுமாகிய எம்.எஸ். ரஸாக்கின் முயற்சின் நிமிர்த்தம் நிதிகள் பெறப்பட்டு சாஹிப் வீதி 3ஆம் குறுக்கு(1மில்லியன்), மதராச வீதி கிழக்குப்பகுதி(1.5மில்லியன்), மதராச வீதி 4ஆம் 8ஆம் குறுக்குகள்(1.5மில்லியன்), அலியார் வீதி 2ஆம் குறுக்கு(2மில்லியன்) ஆகிய வீதிகளின் அபிவிருத்தி பணிகளே ஆரம்பித்து வைக்கப்படடன.
ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், சட்டத்தரணியுமாகிய எம்.எஸ். ரஸாக்கின் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் ஹனி, ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை பிரதேச உயர்பீட உறுப்பினர் எஸ்.எல்.முகீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.