தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் 9.12.2017 மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வேன் விபத்தில் மூவர் படுகாயடைந்த நிலையில் நுவரெலியா ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹேமசந்திரா மாவத்தை பகுதியிலிருந்து தலவாக்கலை நகரை நோக்கி வந்துக்கொண்டிருந்த வான் ஒன்று அதி வேகம் காரணமாக தனது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்திலிருந்த வீடொன்றின் முற்றத்தில் வீழ்ந்துள்ளது.
இதில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
