ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் மற்றும் பிரதியமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் நேற்று இரவு இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வீதியில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் சில பழுந்தடைந்து காணப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாகவும், இரவு நேர போக்குரத்துக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபைப் பிரிவில் உள்ள வீதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் தங்களது இரவுகளை கழித்து வருகின்றனர்.
அத்தோடு வீதிகள் இருளில் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேர போக்குவரத்துக்கு பாரிய இடையூறாக காணப்படுகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபை செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் இவ்விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் மின்விளக்குகள் பொறுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
