எம்.ஜே.எம்.சஜீத்-
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் தேசிய காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எமது கட்சி ஆயத்தமாகவுள்ளது. தற்போது நாம் வேட்பாளர் விண்ணப்பங்களையும் கோரியுள்ளோம்.
தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுவதற்கு விரும்புபவர்கள் கீழ்க்குறிப்பிடப்படும் மாதிரி விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து 2017.11.25ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர் (தேர்தல் பணி) தேசிய காங்கிரஸ், கிழக்கு வாசல், அக்கரைப்பற்று எனும் முகவரிக்கு அனுப்புமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக தொடர்புகளுக்கு - 0773178783 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.

