மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்லை மீள் நிர்ணயம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு எதிர்வரும் 22ம் திகதி மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளது.
எனினும் அது அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அது குறிப்பிட்ட சில உள்ளுராட்சி மன்றங்களுக்கே பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று கூடவுள்ள கூட்டத்தின் போது இது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இன்றையதினம் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தும் திகதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி அநேகமாக எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
